சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தயாராகும் முக்கிய சாலை!

 

சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தயாராகும் முக்கிய சாலை!

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். புதிதாக சென்னை நகருக்குள் காலடி வைக்கும் நபர்கள் இந்த போக்குவரத்து நெரிசலை கண்டு விழி பிதுங்கும் அளவிற்கு மிரண்டு போய் விடுவார்கள் . குறிப்பாக சரக்கு வாகனங்கள் , சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவை அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போது, சென்னை நகரை சுற்றி கொண்டுதான் செல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வாகனங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை வழியாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் கூடுதலாக இருக்கும்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தயாராகும் முக்கிய சாலை!

இதனால் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் எளிதாக பயணிக்க நகர எல்லைகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன . இதில் முக்கியமானது சென்னை- பெங்களூரு, சென்னை – கொல்கத்தா சாலை தான். இதற்கான இரண்டாம் கட்ட நிறைவு பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

வண்டலூர் – மீஞ்சூர் இடையே 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்க 2,160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2011 இல் தொடங்கப்பட்ட நிலையில் சென்னை – திருப்பதி , சென்னை – பெங்களூரு , சென்னை – கொல்கத்தா போன்ற தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தயாராகும் முக்கிய சாலை!

இந்த சாலைகளுக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வண்டலூரில் தொடங்கும் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வண்டலூர் – நெமிலிச்சேரி வரையிலான பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

ஆனால் வண்டலூர் – மீஞ்சூர் இடையேயான சாலையில் பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதற்கான பணிகள் முடிந்து நரேந்திர மோடி இதை திறந்து வைப்பார் என்று தெரிகிறது. அப்போது சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.