பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர்

பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர்

பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் புதிதாக 4,505 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 68 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி விடக்கூடாது என்பதில் அம்மாநில அரசு மிகவும் உறுதியாக உள்ளது.

பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர்
பள்ளி வகுப்பறை

மேலும், கொரோனா வைரஸின் 3வது அலை உருவாகும் என்ற அச்சம் காரணமாக, அம்மாநிலத்தில் இன்னும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த சூழ்நிலையில் பக்தர்களுக்காக மதவழிபாட்டுத்தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி வருகின்றன.

பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்.. மகாராஷ்டிரா அமைச்சர்
வழிபாட்டுத்தலம்

மகாராஷ்டிராவின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, உள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுப்பார்கள். கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். நாம் (மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க) சிறிது காலம் காத்திருக்க வேண்டும். சூழ்நிலைகளை கண்காணித்த பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.