பொது இடங்களில் துப்புவது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்… சிக்கினா அபராதம் அல்லது 2 வருஷம் ஜெயில்

பொது இடங்களில் துப்புவது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்… சிக்கினா அபராதம் அல்லது 2 வருஷம் ஜெயில்

கொரோனா வைரஸால் நம் நாட்டில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் துப்புதல், புகை பிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது.

பொது இடங்களில் துப்புவது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்… சிக்கினா அபராதம் அல்லது 2 வருஷம் ஜெயில்

இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியதாவது: பொது இடங்களில் துப்புதல், புகை பிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வதை தண்டனைக்குரிய குற்றம். முதல் முறை விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் மற்றும ஒரு நாள் சமூக சேவை செய்ய வேண்டும். அதேவேளையில் 2வது முறையாக விதிமீறலில் ஈடுபடுபவர்கள் ரூ.3 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் 3 நாள் சமூக சேவையாற்ற வேண்டும்.

பொது இடங்களில் துப்புவது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்… சிக்கினா அபராதம் அல்லது 2 வருஷம் ஜெயில்

அதன்பிறகும் விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 5 நாட்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும். இதுதவிர மும்பை போலீஸ் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்படி 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஜெயில் அல்லது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.