பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த கோரிய வழக்கு – மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த கோரிய வழக்கு – மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இம்மாதம் ரம்ஜான் பெருநாள் வருவதால் அன்று தொழுகையை எவ்வாறு நடத்துவது என்று இஸ்லாமிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், ரம்ஜான் பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த கோரிய வழக்கு – மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசல்களில் 2 மணி நேரம் தொழுகை நடத்த அனுமதி வேண்டும் என்று இந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் மத்திய, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறிய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.