டிசம்பரில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் – ஜியோ அதிரடி !

 

டிசம்பரில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் – ஜியோ அதிரடி !

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் மாத இறுதிக்குள் குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாக, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாக உள்ளது.

டிசம்பரில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் – ஜியோ அதிரடி !

இந்த 4ஜி ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.8 ஆயிரமாக இருக்கும். இதற்கான சீனாவின் விவோ நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம் செய்துள்ளது. ஜியோ நெட்வொர்க் வசதியுடன் இந்த போன் கிடைக்கும். விவோ வொய் சீரியல் வரிசை மாடலில் ஜியோ 4 ஜி போன் இருக்கும் என கூறப்படுகிறது.

டிசம்பரில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் – ஜியோ அதிரடி !


விவோ வொய்1 சீரியல் போன்கள் ஏற்கெனவே சந்தையில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 6.22 இன்ச் தொடுதிரை, மீடியாடெக் ஹீலியோ 35 பிராசஸர், 4,030 எம்ஏஹெச் பேட்டரி, 5 எம்பி முன்புற கேமரா, 13 எம்பி பின்புற கேமரா வசதிகள் கொண்டிருக்கும். கூகுள் இணைப்பு வசதிகளுடன் இந்த போன் இருக்கும். ஏற்கெனவே 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய்க்குள் குறைந்த விலையில் போன் வழங்க ஐடெல் போன் நிறுவனத்துடன் ஜியோ பேசி வந்தது. ஆனால் ஐடெல் போன்கள் இந்தியாவில் வரவேற்பு இல்லை என்பதால், அந்த முடிவை ஜியோ கைவிட்டது குறிப்பித்தக்கது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனமும், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வழங்க லாவா மற்றும் கார்பன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.