மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்

மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்

மக்களவையில் நேற்று நள்ளிரவையும் தாண்டி உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பூஜ்ய நேரத்தில் 88 உறுப்பினர்களை சபாநாயகர் பேச அனுமதி அளித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மக்களவை நடவடிக்கைகள் வழக்கமாக மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிவடையும். முன்னதாக மாநிலங்களவையில் நேற்று விவசாய சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக மக்களவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் தாமதமாக 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு தொடங்கியது.

மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்
ஓம் பிர்லா

மாநிலங்களவையில் நடந்தற்கு நேர்மாறாக நேற்று மக்களவையில் நடவடிக்கைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களின் ஒப்புதலுடன் பூஜ்ய நேரத்தை தொடங்கினார். மேலும், 88 உறுப்பினர்களையும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்ப அனுமதி அளித்தார்.

மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்
மக்களவை

மக்களவை நடவடிக்கைகள் முடியும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அவை நடவடிக்கைகள் எந்த இடையூறும் இல்லாமல் அதிகாலை 12.36 மணி வரை நடைபெற்றது. நேற்று மக்களவையில் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் (திருத்த) மசோதா 2020 நிறைவேறியது. இநத மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 30 சதவீதம் குறைக்க வழி செய்யும். தகுதிவாய்ந்த நிதி ஒப்பந்த மசோதா 2020, ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020, தேசிய தடய அறிவியல் பல்கலைகழக மசோதா 2020 ஆகியவையும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.