பீகாரில் இப்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது… தேர்தலை ஒத்திவைக்க பஸ்வான் கட்சி ஆதரவு

 

பீகாரில் இப்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது… தேர்தலை ஒத்திவைக்க பஸ்வான் கட்சி ஆதரவு

பீகார் சட்டப்பேரவை தேர்தல்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதனால் அக்டோபர் மாதத்தில் பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை காணொலி வாயிலாக மேற்கொண்டு வருகின்றன.

பீகாரில் இப்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது… தேர்தலை ஒத்திவைக்க பஸ்வான் கட்சி ஆதரவு
லோக் ஜன்கட்சி கட்சி

லோக் ஜன்சக்தி கட்சி
இந்த சூழ்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்துள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி பீகாரில் சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளது. இது தொடர்பாக லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிராக் பஸ்வான் டிவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளில், தனது கட்சி தேர்தலுக்கு தயாராகவே உள்ளது, இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த கூடாது என ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸால் பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இப்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது… தேர்தலை ஒத்திவைக்க பஸ்வான் கட்சி ஆதரவு
சிராக பஸ்வான்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பாதித்தது போல் மத்திய மற்றும் பீகார் அரசுகளின் நிதி பட்ஜெட்டையும் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நடத்தினால் மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும். நாடாளுமன்ற வாரிய உறுப்பினர்களும் இதே கவலையை எழுப்பினர். தேர்தல்களுக்காக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் அபாயத்தை எதிர்க்கொள்கிறார்கள் அது நடக்க கூடாது. தொற்றுநோய் சமயத்தில் தேர்தல் நடத்தினால் வாக்குப்பதிவும் குறைவாக நடைபெற வாய்ப்புள்ளது இது ஜனநாயகத்துக்கு மோசமானது என தெரிவித்துள்ளார்.