“நியாயவிலைக் கடையில் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம்” யாரெல்லாம் ரேஷன் பொருட்கள் பெறலாம்?

“நியாயவிலைக் கடையில் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம்” யாரெல்லாம்  ரேஷன் பொருட்கள் பெறலாம்?

நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவர் கடிதம் கட்டாயம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

“நியாயவிலைக் கடையில் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம்” யாரெல்லாம்  ரேஷன் பொருட்கள் பெறலாம்?

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. இதில் திமுக அரசு கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது. பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது இன்று தொடங்கிய விவாதம் வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் துறைவாரியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின் என பதிலளித்து வருகின்றனர். இதன் மூலம் ஆளும் திமுகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசார விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.

“நியாயவிலைக் கடையில் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம்” யாரெல்லாம்  ரேஷன் பொருட்கள் பெறலாம்?

இந்நிலையில் சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யாரேனும் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதம் கட்டாயம் தேவை என்று கூறியுள்ளார். வயதான , உடல்நிலை சரியில்லாதோருக்கு பதிலாக ஐந்து வயதை கடந்த யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் . ஆனால் அதற்கு குடும்பத் தலைவர் கடிதம் அளித்தல் அவசியம். அப்படி அளிக்கும்பட்சத்தில் கைரேகையை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலருக்கு கைரேகை பதிவாகாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைரேகை என்ற காரணத்திற்காக முதியோர்கள்அலைக்கழிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழக உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.