சுதாங்கன் விட்டுச் சென்றிருக்கும் பாடம் !

 

சுதாங்கன் விட்டுச் சென்றிருக்கும் பாடம் !

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் (63) சென்னையில், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இயற்பெயர் ரங்கராஜன், பத்திரிகை துறைக்கு வந்த பின்னர் தனது பெயரை சுதாங்கன் என மாற்றிக் கொண்டார்.
கையெழுத்து பிரதியாக, அவர் தொடங்கிய வானவில் இதழில் இருந்து பத்திரிகை உலகுக்குள் நுழைந்தார். அதன் மூலம், எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த திசைகள் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
அதன் பின்னர், குமுதம், ஜூனியர் விகடன் இதழ்களிலும் பிறகு, தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளிலும் இருந்தார். தமிழன் எக்ஸ்பிரஸ் இதழின் தொடக்க ஆசிரியராக இருந்தவர்.

சுதாங்கன் விட்டுச் சென்றிருக்கும் பாடம் !


விஜய் டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி என தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல் எழுதியுள்ளார். கிராமப்புற செய்தித் தொகுப்பிற்காக 1986 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் விருது பெற்றவர்.
எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு, செல்லுலாய்ட் சோழன், உஷார் உளவாளி, தேதியில்லா டைரி,சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என அவரது தொகுப்பு நூல்கள் தற்போதும் விற்பனையில் உள்ளன.

சுதாங்கன் விட்டுச் சென்றிருக்கும் பாடம் !


தமிழ் ஊடகத்துறைக்கு முக்கிய பங்களிப்புகளை செய்தவர் சுதாங்கன். அவரது அரசியல் அலசல் நிகழ்ச்சிகள் பலராலும் ரசிக்கப்பெற்றவை.
ஒரு ஊடகவியலாளன் எப்போது, கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவரது அழுத்தமான நம்பிக்கை. கடைசிவரை அவர் அதை கைவிடவில்லை. தனது வீட்டில் பெரிய நூலகத்தையே வைத்திருந்தார். நிறைய கற்க வேண்டும் என்கிற தவிப்பு, ஊடகவியலாளர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்பதை அவர் அடிக்கடி குறிப்பிடுவார். அதுவே அவர் தமிழ் ஊடக உலகிற்கு விட்டுச் சென்றுள்ள பாடம்.