டி.ஆர். எடுத்த திடீர் முடிவு : குபீரென்று சிரிக்கும் அரசியல் கட்சிகள்!!

 

டி.ஆர். எடுத்த திடீர் முடிவு : குபீரென்று சிரிக்கும் அரசியல் கட்சிகள்!!


வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் லட்சிய திமுக, எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

டி.ஆர். எடுத்த திடீர் முடிவு : குபீரென்று சிரிக்கும் அரசியல் கட்சிகள்!!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த சூழலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள டி.ராஜேந்தர், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து தொடங்கி, இந்நாள் துணை முதல்வர் அண்ணா திமுகவின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஓபிஎஸ் அவர்களின் நீண்டகால நண்பர் ஆவார். நடைபெறும் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதற்கு முன்பு ஓபிஎஸ் என்னை அழைத்தார் …சென்றேன்; மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

டி.ஆர். எடுத்த திடீர் முடிவு : குபீரென்று சிரிக்கும் அரசியல் கட்சிகள்!!

மறைந்த முன்னாள் ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் அண்ணா திமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம். அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல். இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப் போகிறது பலப்பரிட்சை . இதில் நான் போய் என்ன செய்யப் போகிறேன் புது சிகிச்சை; ஒருவருடைய வாக்கு வன்மை ,அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை ,அதில் வெளிப்படும் உண்மை அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள் . அதனடிப்படையில் என்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள் அது ஒரு காலம்.

டி.ஆர். எடுத்த திடீர் முடிவு : குபீரென்று சிரிக்கும் அரசியல் கட்சிகள்!!

வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கி கொள்ளலாம் என்பது இந்த காலம். காலமும் சரியில்லை களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன். பத்தாததுக்கு இது கொரோனா காலம் பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும் முகமூடி. பக்குவப்பட்ட வாழ வேண்டும் என்றால் அமைதி காக்க வேண்டும் வாய் மூடி. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் இலட்சிய திமுக நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை. அரவணைக்கவும் இல்லை. நடுநிலையோடு இருக்க விரும்புகிறோம் ” என்று கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சிய திமுக யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என்ற டி.ராஜேந்தர் அறிவிப்பு சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் மத்தியிலும் சிரிப்பை உண்டாக்கியுள்ளது.