விபரீதமான சட்டத்துக்கு பாகிஸ்தான் அதிபர் பச்சை கொடி!

 

விபரீதமான சட்டத்துக்கு பாகிஸ்தான் அதிபர் பச்சை கொடி!

சட்டங்கள் கடுமையாகும்போதே குற்றங்கள் குறையும் என்பது ஒரு சாராரின் எண்ணம். குறிப்பாக, அரபு நாடுகளில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். நம் பேச்சு வழக்கில்கூட இதுக்கெல்லாம் துபாயாக இருந்துச்சுன்னா… என்று சொல்வதும் உண்டு.

உலகம் முழுக்கவே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில்கூட 2015 ஆம் ஆண்டில் பெண்கள் மீதான வன்முறை செய்யததற்காக 3 லட்சத்துக்கு அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நவம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

விபரீதமான சட்டத்துக்கு பாகிஸ்தான் அதிபர் பச்சை கொடி!

கொரோனா தொற்று காரணமாக, லாக்டெளன் அறிவிக்கப்பட்ட காலத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அந்தந்த நாடுகள் கடுமையான சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அவற்றில் ஒன்றாகவே பாகிஸ்தான் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பெண்களுக்கு இழக்கப்படும் பாலியல் குற்றங்கள் பெரும் தலைவலியாக அந்நாட்டு அரசுக்கு மாறியது. அதனால், பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை அளிக்கும் சட்டத்தை சென்ற மாதம் முன் வைத்தது.

விபரீதமான சட்டத்துக்கு பாகிஸ்தான் அதிபர் பச்சை கொடி!

இந்தச் சட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்திந்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்திருக்கிறார். அதனால், இந்தச் சட்டம் பாகிஸ்தானில் நடைமுறைக்கு வருகிறது.