டெல்லியில் இன்று பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு நடைபெறுகிறது

 

டெல்லியில் இன்று பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு நடைபெறுகிறது

உடல் நலக்குறைவால் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.

உடல் நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) நேற்று காலமானார். பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கள் தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி 7 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். எந்த பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு நடைபெறுகிறது
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (கோப்பு படம்)

டெல்லியில் இன்று அரசு மரியாதையுடன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள லோதி மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை உத்தியோகபூர்வ பிரமுகர்கள் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு 45 நிமிடங்கள் மற்ற பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

டெல்லியில் இன்று பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு நடைபெறுகிறது
பிராணப் முகர்ஜியிடம் ஆசி பெறும் பிரதமர் மோடி (கோப்பு படம்)

அதை தொடர்ந்து 10 ராஜாஜி மார்க்கில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேர நேரம் இருக்கும். கோவிட்-19 நெறிமுறைகள் காரணமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் வழக்கான துப்பாக்கி வண்டிக்கு பதிலாக ஹியர்ஸ் வண்டியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.