10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 14 நாடுகள் இவைதாம்

 

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 14 நாடுகள் இவைதாம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 73 லட்சத்து 93 ஆயிரத்து 283 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 65 லட்சத்து 84 ஆயிரத்து 229 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 41 ஆயிரத்து 747 பேர். 15 லட்சத்தைக் கடந்து விட்டது மரணங்களின் எண்ணிக்கை. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,92,67,307 பேர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 14 நாடுகள் இவைதாம்

உலகளவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்த நாடுகள் கூடிக்கொண்டே வருகிறது. இதுவரை 12 நாடுகள் என்றிருந்த நிலையில் மாற்றமாகி 14 என்று அதிகரித்திருக்கிறது.

முதலிடத்தில் அமெரிக்காவே உள்ளது. இந்த நாட்டில், 1,51,59,529 பேர் கொரோனாவால் பாதிப்பட்டிருக்கிறார்கள். 2,88,906 பேர் இறந்திருக்கிறார்கள்.

இரண்டாம் இடத்தில் இந்தியா. இங்கு, 96,77,203 பேர் பாதிக்கப்பட்டு, 1,40,590 பேர் மரணம் அடைந்துள்ளனர். மூன்றாம் இடம் பிரேசில். அங்கு, 66,03,540 பேர் பாதிக்கப்பட்டு, 1,76,962 பேர் இறந்திருக்கிறார்கள்.

நான்காம் இடத்தில் இடத்தில் ரஷ்யா. ரஷ்யாவில் 24,60,770 பேர் பாதிக்கப்பட்டு, 43,141 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ். அங்கு 22,92,497 பேர் பாதிக்கப்பட்டு, 55,155 பேர் இறந்திருக்கிறார்கள்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 14 நாடுகள் இவைதாம்

ஆறாம் இடத்தில் உள்ள இத்தாலியில் 17,28,878 பேரும், ஏழாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டில் 17,23,242 பேரும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளனர்.

எட்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 16,99,145 பேரும், ஒன்பதாம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் 14,63,110 பேரும், பத்தாம் இடத்தில் உள்ள கொலம்பியா நாட்டில் 13,71,103 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11- வது இடத்தில் இருப்பது ஜெர்மனி. ஜெர்மனியின் மொத்த பாதிப்ப்பு 11,84,845 பேர். 12- ஆம் இடத்தில் உள்ள மெக்சிகோவில் 11,75,850 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13-ம் இடத்தில் உள்ள போலந்து நாட்டில் 10,63,449 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14-ம் இடத்தில் உள்ள இரான் நாட்டில் 10,40,547 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.