’இறைவனின் சமையலறை’ -ஆட்சியர் கந்தசாமியின் மனிதாபிமானம்

’இறைவனின் சமையலறை’ -ஆட்சியர் கந்தசாமியின் மனிதாபிமானம்

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக மக்கள் நெடுந்தூரத்தில் இருந்தெல்லாம் வந்து நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுவினை கொடுத்துவிட்டு செல்கின்றனர். ஏழ்மை நிலையின் காரணமாக சிலர் ஓட்டல்களில் சாப்பிடாமல் பசிமயக்கத்திலேயே வீடு திரும்புகின்றனர். இதையெல்லாம் உணர்ந்த திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, குறைதீர்ப்பு முகாம்களுக்கு வருவோருக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

’இறைவனின் சமையலறை’ -ஆட்சியர் கந்தசாமியின் மனிதாபிமானம்

‘இறைவனின் சமையலறை’என்ற பெயரில் ஆட்சியர் அலுவலகத்தில் 15 லட்சம் செலவில் சமையற்கூடம் அமைத்திருக்கிறார். திங்கட்கிழைதோறும் இங்கு உணவு சமைக்கப்பட்டு, இலவசமாக வழங்க ஏற்பாடுகளை செய்யும், இன்றைய குறைதீர்ப்பு முகாமிற்கு வந்தவர்களுக்கு தனது கையினாலேயே உணவு படைத்தார் ஆட்சியர் கந்தசாமி.

’இறைவனின் சமையலறை’ -ஆட்சியர் கந்தசாமியின் மனிதாபிமானம்

வெஜ் பிரியாணி, தயிர்சாதம், கேசரி, மிக்சர், ஊறுகாய் ஆகியவை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.