தீயால் பரவிய வாட்ஸ்அப் மெசேஜ்… திணறிய கடத்தல் கும்பல்… காலையில் கடத்தல்… மாலையில் குழந்தை மீட்பு!- திருப்பூரில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

 

தீயால் பரவிய வாட்ஸ்அப் மெசேஜ்… திணறிய கடத்தல் கும்பல்… காலையில் கடத்தல்… மாலையில் குழந்தை மீட்பு!- திருப்பூரில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

காலையில் கும்பலால் கடத்தப்பட்ட குழந்தை மாலையில் மீட்கப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் பறந்த மெசேஜால் குழந்தை விரைவாக மீட்கப்பட்டது காவல்துறையினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் காஜா மைதீன். இவரது மகன் ஜாவித் அகமது (4). இவர் நேற்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஜாவித் காணாமல் போனான். இதையடுத்து, மகனை அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியுள்ளார் காஜா மைதீன். ஆனால், மகன் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக வாட்ஸ் அப்பில் தனது மகனின் படத்தை பகிர்ந்து, தனது மகனை காணவில்லை எனவும் தனது மகனை கண்டால் உடனடியாக தனக்கு தொடர்பு கொள்ள வேண்டி தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்தார் காஜா மைதீன்.

திருப்பூர் முழுவதும் காட்டுத்தீ போல் இந்த செய்தி பரவியது. ஒவ்வொருவரும் வேகமாக பகிர்ந்ததுடன் குழந்தையை தேடவும் முயன்றனர். இந்நிலையில் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் குழந்தையை எங்கும் கொண்டு செல்ல முடியாமல் அச்சமடைந்து மாலை நேரத்தில் குழந்தையை திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அருகே இறக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

தீயால் பரவிய வாட்ஸ்அப் மெசேஜ்… திணறிய கடத்தல் கும்பல்… காலையில் கடத்தல்… மாலையில் குழந்தை மீட்பு!- திருப்பூரில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காலையில் காணாமல் போன குழந்தை வாட்ஸ்அப் பகிர்வின் மூலமாக மாலையே கண்டறியப்பட்ட சம்பவம் திருப்பூரில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் குழந்தையை கடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொாண்டு வருகின்றனர்.