கொரோனா 3ம் அலை : கோகோ-கோலா ஆலையை கொரோனா மையமாக மாற்றும் கேரள அரசு!

 

கொரோனா 3ம் அலை : கோகோ-கோலா ஆலையை கொரோனா மையமாக மாற்றும் கேரள அரசு!

கொரோனா 3ம் அலை பரவும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.

கொரோனா 3ம் அலை : கோகோ-கோலா ஆலையை கொரோனா மையமாக மாற்றும் கேரள அரசு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 60,753 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,98,23,546 ஆக உள்ளது. 97,743 பேர் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 1,647 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் 3,85,137 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதேபோல் இதுவரை இந்தியாவில் 2,86,78,390 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் எங்கும் செல்லவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் . கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன் தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. கொரோனா மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட வேகமாக இருக்கும். இதனால் மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

கொரோனா 3ம் அலை : கோகோ-கோலா ஆலையை கொரோனா மையமாக மாற்றும் கேரள அரசு!

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் வேகமாக பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலக்காட்டில் செயல்பாட்டில் இல்லாத கோகோ கோலா ஆலையை ரூபாய் 1.1 கோடி செலவில் சிகிச்சை மையமாக மாற்றி அமைக்க உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.