மீண்டும் தொற்றுநோய் தீவிரம்.. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை…. கர்நாடக அரசு அறிவிப்பு

மீண்டும் தொற்றுநோய் தீவிரம்.. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை…. கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் பலனாக தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

மீண்டும் தொற்றுநோய் தீவிரம்.. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை…. கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பள்ளிகளுக்கு செல்ல மாணவர்களை கல்வித்துறை முதலில் அனுமதி அளித்தது. ஆனால் தற்போது தொற்றுநோய் அதிகரித்து வருவதால், மாணவர்கள் பள்ளிகள் அல்லது கல்லூரிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்திப்பது பாதுகாப்பானது அல்ல என்று அரசு உணர்ந்தது.

மீண்டும் தொற்றுநோய் தீவிரம்.. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை…. கர்நாடக அரசு அறிவிப்பு
வகுப்பறையில் கிரிமி நாசினி தெளிப்பு

எனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கும், பல்கலைகழகத்திற்கு முந்தைய கல்லூரிகளுக்கும் சென்று ஆசிரியர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக அரசின் தற்போதைய நடவடிக்கை பள்ளிகள் இன்னும் கொஞ்சம் நாளைக்கு திறக்க வாய்ப்பில்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.