புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.. கர்நாடக பா.ஜ.க. அரசு முடிவு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.. கர்நாடக பா.ஜ.க. அரசு முடிவு

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 20ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை, எம்.ஜி. மற்றும் பிரிகேட் சாலை உள்பட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்துள்ளோம். இந்த பரிந்துரை முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.. கர்நாடக பா.ஜ.க. அரசு முடிவு
அசோகா

முதல்வரும் ஒரு சுற்று சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அவர் அறிவிப்பார். கோவிட்-19ன் இரண்டாவது அலையை கர்நாடகா எதிர்க்கொள்ளக்கூடும் என்று அறிக்கையின் பார்வையில் கடுமையான கட்டுப்பாடுகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.. கர்நாடக பா.ஜ.க. அரசு முடிவு
பி.எஸ். எடியூரப்பா

பொது இடங்களில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், அதேசமயம், ஹோட்டல்கள், பார்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்டுகளில் 50 சதவீத திறனுடன் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்.