மகாராஷ்டிராவிலிருந்து மக்கள் வருவதை தடுக்க எல்லையில் கண்காணிப்பை தீவிர படுத்திய கர்நாடக அரசு

மகாராஷ்டிராவிலிருந்து மக்கள் வருவதை தடுக்க எல்லையில் கண்காணிப்பை தீவிர படுத்திய கர்நாடக அரசு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து சாலை போக்குவரத்தை தடை செய்துள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவுக்குள் சிலர் யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து விடுகின்றனர்.

மகாராஷ்டிராவிலிருந்து மக்கள் வருவதை தடுக்க எல்லையில் கண்காணிப்பை தீவிர படுத்திய கர்நாடக அரசு

கடந்த திங்கட்கிழமையன்று கர்நாடகாவில் புதிதாக 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவுடன் தொடர்புடையவர்கள். இதனையடுத்து அம்மாநிலத்திலிருந்து யாரும் கர்நாடகவுக்குள் உள்ளே நுழைந்து விடாதப்படி தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி மகாராஷ்டிரா எல்லையில் உள்ள அமைந்துள்ள 60 காவல் நிலையங்களுக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலிருந்து மக்கள் வருவதை தடுக்க எல்லையில் கண்காணிப்பை தீவிர படுத்திய கர்நாடக அரசு

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இது குறித்து கூறுகையில், மகாராஷ்டிராவிலிருந்து வரும் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரிகிறது. நடந்து அல்லது சைக்கிள் அல்லது வேறுவிதமான போக்குவரத்து வழிமுறையில் கர்நாடகவுக்குள் வர மக்கள் முயற்சி செய்கிறார்கள், இதனால் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளது. இதனையடுத்து மக்கள் வருவதை தடுக்க மாவட்டங்களுக்கு இடையிலான போலீஸ் சோதனை சாவடிகளை மகாராஷ்டிராவின் எல்லை பகுதிகளுக்கு மாற்றுகிறது என தெரிவித்தார்.