Home இந்தியா கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது!

கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுர குடிநீருக்கு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கபசுர குடிநீர்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

mp venkatesan

நாடாளுமன்ற கூட்ட தொடரில் மதுரை எம்பி சு. வெங்கடேசன், கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக்குடி நீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் துறை எந்த மாதிரியான ஆய்வை மேற்கொண்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ‘கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது நன்கு தெரியும். தமிழகத்தில் இதுவரை 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் விநயோகிக்கப்பட்டுள்ளது. இதற்கான கிளினிக்கல் மற்றும் ப்ரீ கிளீனிக்கல் ஆய்வுகள் நடத்தப்பட்டதன் முடிவில்,கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்’ என்றார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews