உமாபாரதியின் கணிப்பை பொய்யாக்கிய நீதிபதி

 

உமாபாரதியின் கணிப்பை பொய்யாக்கிய நீதிபதி

இருபத்து எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த பாபர் மசூதி வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறார் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ்.

உமாபாரதியின் கணிப்பை பொய்யாக்கிய நீதிபதி

குற்றம்சாட்டப்பட்ட 49 பேரில் வழக்கு நடைபெற்று வந்த காலகட்டங்களில் 17 பேர் உயிரிழந்துவிட்டனர். இது போக இருந்த 32 பேரையும், ’’திட்டமிட்டு பாபர் மசூதியை இடிக்கவில்லை’’ என்று கூறி விடுதலை செய்துவிட்டார் நீதிபதி.

உமாபாரதியின் கணிப்பை பொய்யாக்கிய நீதிபதி

32 பேர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் உமாபாரதியும் இருந்தார். அவர் தனக்கு இந்த தீர்ப்பு சாதகமாக இருக்காது என்றும், தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். ஒருபோதும் தூக்கில் இருந்து தப்பிக்க ஜாமீன் கேட்க மாட்டேன் என்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

உமாபாரதியின் கணிப்பை பொய்யாக்கிய நீதிபதி

பாஜகவில் தனக்கு முக்கிய பதவி வழங்கப்படாததால், பாமர் மசூதில் வழக்கில் தண்டனை கிடைத்துவிடும் என்பதை கருதியே தனக்கு பதவி வழங்கவில்லை என்ற யூகத்தில், தனக்கு தண்டனை கிடைக்கும் என்று கணித்திருந்தார் உமாபாரதி. ஆனால் அவரது கணிப்பை பொய்யாக்கிவிட்டார் நீதிபதி எஸ்.கே.யாதவ்.