ஹரியானாவில் அரசியல் திடீர் பரபரப்பு…. தேசிய, மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த பா.ஜ.க. கூட்டணி கட்சி

ஹரியானாவில் அரசியல் திடீர் பரபரப்பு…. தேசிய, மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த பா.ஜ.க. கூட்டணி கட்சி

ஜன்னாயக் ஜனதா கட்சி
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.-ஜன்னாயக் ஜனதா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜன்னாயக் ஜனதா கட்சி பிறந்தே (தொடங்கி) ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. சவுதாலா குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டையால் இந்திய தேசிய லோல் தால் கட்சியிலிந்து ஜன்னாயக் ஜனதா கட்சி தோன்றியது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஜய் சிங் சவுதாலா, 2019 டிசம்பர் 9ம் தேதியன்று ஜன்னாயக் ஜனதா கட்சியை தொடங்கினார்.

ஹரியானாவில் அரசியல் திடீர் பரபரப்பு…. தேசிய, மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த பா.ஜ.க. கூட்டணி கட்சி
ஜன்னாயக் ஜனதா கட்சி

கலைப்பு
ஜன்னாயக் ஜனதா தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் அந்த கட்சியின் தேசிய, மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து பிரிவுகளையும் திடீரென ஜன்னாயக் ஜனதா கட்சி கலைத்துள்ளது. கட்சியின நிறுவன கட்டமைப்பை புதுப்பிக்கும் நோக்கில், கட்சியின் நிறுவனர் அஜய் சிங் சவுதாலாவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் அரசியல் திடீர் பரபரப்பு…. தேசிய, மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த பா.ஜ.க. கூட்டணி கட்சி
துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா

உட்கட்சி பூசல்
கடந்த டிசம்பரில் ஜன்னாயக் ஜனதா கட்சிக்குள் உட்கட்சி பூசல் எழுந்தது. ஹரியானா துணை முதல்வரும், ஜன்னாயக் ஜனதாக கட்சி தலைவருமான துஷ்யந்த் சவுதாலாவுக்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். ஜன்னாயக் ஜனதா கட்சியின் துணை தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாக கட்சிக்குள் களையெடுக்கும் நோக்கில் கட்சியை புதுப்பிக்கும் நடவடிக்கை ஆலோசனையை நிறுவனர் அஜய் சிங் சவுதாலா முன்வைத்ததாக அரசல் புரலாக பேசப்படுகிறது.