ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

 

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

ராமர் கோயில் கட்டுமான பணிகள் வரும் 5ம் தேதியன்று பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்காக பல்வேறு தரப்பு மக்களும் மத வேறுபாடின்றி நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயின் சமுதாயத்தினர் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக 24 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்களை வழங்கினர்.

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. பிரநிதிகளிடம் மொத்தம் 24 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்களை ஜெயின் துறவிகள் வழங்கினர். இது தொடர்பாக ஜெயின் துறவி ஒருவர் கூறுகையில், மெகா ராமர் கோயில் கட்டுவது குறித்து முழு நாட்டுடன் ஜெயின் சமூகமும் உற்சாகமாக உள்ளது. இந்த பங்களிப்புடன் எங்களது உற்சாகத்தை வெளிப்படுத்துகிறோம். வரும் 5ம் தேதியன்று எங்கள் சமூகம் ஆயிரக்கணக்கான மந்திரங்கள் சொல்லும் மற்றும் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைய விரும்புகிறது. முழு சமூகமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்கள் வீடுகளில் விளக்குகள ஏற்றி வைக்கும்.

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

பல ஜெயின் சமூகத்தினரின் பங்களிப்புடன் நாங்கள் 18 கிலோ வெள்ளியை சேகரித்தோம். ராமர் கோயில் கட்டுமான பணிக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்குவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்தார். ராமர் கோயில் சார்பாக ஜெயின் சமுதாயத்திடம் வெள்ளி செங்கல்களை பெற்றுகொண்ட அஸ்வின் படேல் கூறுகையில், ஜெயின் சமூகம் இந்து சமூகத்தின் ஒரு பகுதி. ஜெயின் சமூகம் இந்து பழக்கவழக்கங்களின்படி செயல்படுகிறது. எனவே புதிய கோயில் கட்டுவது குறித்து உற்சாகமாக உள்ளது என தெரிவித்தார்.