வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

 

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

‘கணவன் – மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போனால்தான் செலவுகளைச் சமாளிக்க முடியும்’ என்று சொல்வது சர்வசாதாரணமாகி விட்டது. நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலைக்கு பெற்றோர் வந்துவிடுகின்றனர். முந்தைய தலைமுறையினரைப் போல மூன்று, நான்கு குழந்தைகள் உள்ள வீட்டினைப் பார்ப்பது அரிதினும் அரிது.

ஒரு குழந்தை போதும் என்ற முடிவுக்கு வர என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை முதலில் பார்ப்போம். ஏற்கெனவே சொன்னதுபோல பொருளாதாரம். மகப்பேறு என்பதே ரொம்ப செலவழிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. மாதந்தோறும் பரிசோதனையில் தொடங்கி, நார்மல் டெலிவரியா.. சிசேரியனா என்பது வரை செலவு ஏராளமாகிறது. அதுவே ஒரு குழந்தை போதும் என்று நினைப்பதற்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

வேலைக்குச் செல்லும் பெண்கள் எனில், இரண்டாம் குழந்தையைப் பற்றி யோசிப்பதற்கே அச்சப்பட்டுகின்றனர். ஏனெனில், அதற்கான விடுமுறையை அரசு கொடுக்கச் சொன்னாலும் பல தனியார் நிறுவனங்கள் அளிப்பதில்லை. மேலும், மகப்பேற்றை ஒட்டிய விடுமுறையால் பணி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் கட்டாகி விடுகிறது.

தனிக்குடித்தனம் இருக்கும் வீடுகளில் குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் சிக்கல் இருக்கின்றன. வீட்டின் பெரியர்களை உடன் வைத்திருக்க சிலரால் முடியவில்லை. சில பெரியவர்கள் நகரங்களில் வசிக்கவும் தயாராக இல்லை. எனவே, ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

குழந்தைகளின் கல்வி செலவு என்பது கடந்த 20 ஆண்டுகளில் பலநூறு மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, இரண்டு, மூன்று குழந்தைகள் எனில், அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க இயலாது என்றும் சில பெற்றோர் நினைப்பதால் ஒரு குழந்தையோடு திருப்தி கொள்கிறார்கள்.

சரி, இவையெல்லாம் நியாயமான காரணங்களாகக்கூட இருக்கலாம். ஆனால், வீட்டில் ஒரு குழந்தையாக இருப்பவர்கள் இழப்பவை ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முக்கிய ஐந்து மட்டும் பார்ப்போம்.

1. தனிமை:

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழி என்பதன் பொருள் ஒரு சண்டையின்போது தம்பி உதவுவான் என்று அல்ல. கூடவே ஒருவன் இருப்பான் எனும் நம்பிக்கைதான். ஒரு குழந்தையாக இருப்பவர்கள் முதலில் எதிர்கொள்வது தனிமை. அப்பா, அம்மா வேலைக்குச் சென்றுவிட்டால் அவ்ர்கள் வரும்வரை டிவி, மொபைலோடுதான் பொழுதைக் கழிக்க வேண்டும். சில நேரங்களில் அதுவே அவர்களுக்கு பெருந்துயரத்தை அழைத்துவந்துவிடக் கூடும்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

2. ஏமாற்றத்தை எதிர்கொள்ளாமை:

ஒரு குழந்தைதானே என்று அது கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பார்கள் பெற்றோர். அதனால், தான் கேட்பதெல்லாம் கிடைக்கும் எனும் மனநிலை வந்துவிடும். ஆனால், எதிர்காலத்தில் ஏதேனும் ஒருவகையில் ஏமாற்றம் வந்தால் அதை எதிர்கொள்வதில் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

3. சுமை:

ஒரு குழந்தை என்பதால் பெற்றோரின் அன்பை மட்டுமல்ல, அவர்கள் சம்பாதிப்பதையும் முழுமையாக அனுபவிப்பார்கள். அதேநேரம் பெற்றோருக்கு வயதாகி விட்டால் அவரளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் இவர் ஒருவருக்கு மட்டுமே என்றாகி விடும். அதனால், சில அவசியமான இடமாற்றத்தைக்கூட செய்ய முடியாது. மேலும், தனியே கவனித்துக்கொள்வதால் பெற்றோரைச் சுமையாகக் கருதும் மனநிலை வரக்கூடும்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

4. ஒன்றிணையாமை:

சமூகத்தோடு ஒன்றிணைவது என்பது ஒரு குழந்தையாக இருப்போர்க்கு சிக்கலாகவே இருக்கும். ஏனெனில், சமூகத்தில் உள்ளவற்றை வீட்டுக்குள் அவர்கள் வயதை ஒட்டியவர்களோடு விவாதிக்க முடியாது. பெற்றோர் சொல்வது பெரும்பாலும் அறிவுரைகளாகவே இருக்கும். முந்தைய தலைமுறையின் சிந்தனையோட்டத்தோடு இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

5. ஷேரிங்:

ஒரே குழந்தை எனும்போது பெற்றோர் வாங்கி வரும் தின்பண்டம் முதல் அவர்களின் அன்பு, வீட்டின் பொருள்கள் என எல்லாமே அவர்களுக்குத்தான். அதனால் எதையும் யாரோடும் பகிர்ந்துகொள்ளும் பழக்கமே இருக்காது. இது அவர்கள் வளரும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், சமூகம் போன்ற இடங்களில் சிக்கலானதாக மாற்றிவிடும். பொருள்களை மட்டுமல்ல அன்பைப் பகிர்ந்துகொள்வது விட்டுக்கொடுத்தல் என்பதெல்லாம்கூட இருக்காது. இப்பழக்கம் அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்துவிடும்.

வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

இவையெல்லாம் ஒரு குழந்தையாக இருக்கும் பெற்றோரைப் பயமுறுத்த அல்ல. ஓர் எச்சரிக்கைக்காகவே. அவர்களுக்கு இந்தச் சிக்கல்கள் எழாத வண்ணம் உங்களின் குழந்தை வளர்ப்பை மேற்கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.