இணையத்தில் வலுக்கும் எச்.ராஜா – தமிழன் பிரசன்னா மோதல்!

பிரதமர் மோடியை விமர்சித்த தமிழன் பிரசன்னாவின் போன் நம்பரை பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா வெளியிட்டதைத் தொடர்ந்து ராஜாவுக்கும் தமிழன் பிரசன்னாவுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க பேச்சாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா பிரதமர் மோடியை விமர்சித்ததாக பா.ஜ.க-வினர் கொந்தளித்தனர். தமிழன் பிரசன்னாவின் போன் நம்பரை எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதன் மூலம் பா.ஜ.க தொண்டர்களை தமிழன் பிரசன்னாவுக்கு போன் செய்து திட்டும்படி மறைமுகமாக எச்.ராஜா கேட்டுக்கொண்டார்.

h.raja
இதற்கு பதிலடியாக, தன்னுடைய போனுக்கு வரும் அழைப்புகளை எல்லாம் எச்.ராஜா நம்பருக்கு ஃபார்வர்டு செய்தார் தமிழன் பிரசன்னா. தமிழன் பிரசன்னாவை திட்டித் தீர்ப்பதாக நினைத்து எச்.ராஜாவை திட்டியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனால், தமிழன் பிரசன்னாவின் மனைவி போன் நம்பரை எச்.ராஜா தரப்பினர் சமூக ஊடகங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழன் பிரசன்னா கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “காரைக்குடி மண்ணிக்கு மணநாள் வாழ்த்துகள். கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்க வக்கில்லாமல் தான், பா.ஜ.க. பொறுக்கிகள் வசை பாட வசதியாக என்னுடைய எண்ணைப் பொதுவில் பதிந்தார் எச்.ராஜா. பாஜ.க. பொறுக்கிகளின் செயல்திறம் என்ன என்பதை அவர் தெரிந்துகொள்ள வசதியாக, நாம் அவருடைய எண்ணுக்கே அந்த அழைப்புகள் செல்லும்படி செய்தோம். இப்போது என் இணையரின் எண்களைப் பொதுவெளியில் போட்டு, அரசியல் என்பதைத் தாண்டிய தன் அநாகரீக புத்தியை வெளிப்படுத்தியுள்ளார் எச்.ராஜா. இந்த எண்ணையும், இதே போல் எங்கு மாற்றிவிட வேண்டுமோ அங்கு மாற்றிவிடுவது மிகவும் எளிமையான செயல் தான். அதில் பிரமாதமில்லை.

நமக்கு அவர் வீட்டில் உள்ளோரின் எண்கள் கிடைக்காதா என்ன? குறைந்தபட்சம் சென்னையிலிருக்கும் கோடம்பாக்கம் சின்ன மண்ணி வீட்டின் எண்ணாவது இல்லையா என்ன? திருவாரூர் நன்னிலம் பில்லூரில் உள்ள எச்.ராஜாவின் மகள் எண் இல்லையா..? இல்லை மருமகன் சூரியா எண் இல்லையா ..? அதற்கும் மேலாக காரைக்குடி ‌பெரிய‌ மண்ணியின் எண் இல்லையா என்ன.?
அரசியலுக்கு அரசியல் பதிலாகலாம். அநாகரிகத்துக்கு அநாகரிகம் பதிலாகாது. நம் கவலையெல்லாம் இந்த மனநோயாளிக்கு #HRajaBJP வாழ்க்கை ‌தந்த எங்கள் மண்ணியை எண்ணித் தான்! பாவம் மண்ணி! இந்தச் சூழலில் அவருடைய படத்தை வெளியிடுவதும் நமக்கு நாகரிகமாகப் படவில்லை” என்று கூறியுள்ளார். தமிழன் பிரசன்னாவின் இந்த பதிவுக்கு பா.ஜ.க-வினர் எதிர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Most Popular

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...