‘ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு ” : மு.க. ஸ்டாலின்

‘ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு ”  : மு.க. ஸ்டாலின்

ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு ”  : மு.க. ஸ்டாலின்

கடலூர் தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சாதி காரணமாக ஆலோசனை கூட்டத்தின்போது  தரையில் அமரவைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு .சமத்துவம், ஜனநாயகத்திற்கு எதிரான இழிசெயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

‘ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு ”  : மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் வார்டு உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.