வாகன காலாவதி கொள்கை, வரி குறைப்பை எதிர்பார்க்கும் வாகன துறை… நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா?

 

வாகன காலாவதி கொள்கை, வரி குறைப்பை எதிர்பார்க்கும் வாகன துறை… நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா?

மத்திய பட்ஜெட்டில் வாகன காலாவதி கொள்கை மற்றும் வாகனங்களுக்கான வரி குறைப்பு தொடர்பான அறிவுப்புகளை வாகனத்துறை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

முதலில் பொருளாதார மந்தநிலை அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் லாக்டவுன் போன்ற காரணங்களால் நம் நாட்டில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் வாகன துறை நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டன. அண்மையில் பண்டிகை காலம் காரணமாக வாகன விற்பனை சிறிது ஏற்றம் கண்டது. இருப்பினும், தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள, வாகன காலாவதி கொள்கை மற்றும் வாகன வரி குறைப்பு ஆகியவற்றை வாகன துறை விரும்புகிறது.

வாகன காலாவதி கொள்கை, வரி குறைப்பை எதிர்பார்க்கும் வாகன துறை… நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா?
வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.

தற்போது பெரும்பாலான கார்கள், வர்த்தக வாகனங்கள் மற்றம் இரு சக்கர வாகனங்கள் 28 சதவீத வரிவிதிப்புக்குள் வருகிறது. வாகன துறை மீதான வரி மிக அதிகம். அதனை குறைக்க வேண்டும் என்று வாகன துறை மட்டும் அல்லாது பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். வாகனங்கள் மீதான வரியை குறைத்தால் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று வாகன துறை எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 1ம் தேதியன்று தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று வாகன துறை எதிர்பார்க்கிறது.

வாகன காலாவதி கொள்கை, வரி குறைப்பை எதிர்பார்க்கும் வாகன துறை… நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா?
காலாவதி வாகனங்கள்

அடுத்ததாக வாகன காலாவதி கொள்கையை எவ்வளவு விரைவாக அமல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வாகனத்துறையினர் நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர். சாலை பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பழைய வாகனங்களிலிருந்து எஃகு, தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை மறுசுழற்சி செய்வதால் அவற்றின் இறக்குமதியை குறைக்க உதவும். சாலையிலிருந்து பழைய வாகனங்களை அகற்றுவது காற்று மாசுவை குறைக்க உதவும். மேலும் புதிய வாகனங்களுக்கான தேவையும் அதிகரிக்கும். அதோடு பழைய வாகனங்களை காட்டிலும் புதிய வாகனங்களின் எரிபொருள் திறன் அதிகமாக என்பதால் மத்திய அரசின் பெட்ரோலிய இறக்குமதி செலவினம் குறையும். ஆகையால் வாகன காலாவதி கொள்கை தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்று வாகன துறை விரும்புகிறது.