புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் – உலகளவில் கொரோனா நிலவரம்

 

புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் – உலகளவில் கொரோனா நிலவரம்

உலகின் தீராத தலைவலியாக மாறியிருக்கிறது கொரோனா. இதுவரை எந்த மருந்து கண்டுபிடிக்க இயலாத காரணத்தால், நோய்த் தொற்று பரவுவதையும் அனைவரையும் குணம் அளிப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் இறுதிகட்ட கிளினிக்கல் பரிசோதனைகள் நடைபெற விருக்கிறது. இது வெற்றிக்கரமாக முடிவடைந்தால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் – உலகளவில் கொரோனா நிலவரம்

இன்றைய (ஆகஸ்ட் 11) காலை நிலவரப்படி, உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நேற்றே இரண்டு கோடியைக் கடந்துவிட்டது. இன்று அதில் எவ்வளவு கூடியிருக்கிறது… நலம் பெற்றவர்கள் எத்தை பேர் உள்ளிட்ட விவரங்களையும் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 2 லட்சத்து  54 ஆயிரத்து 685 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 31 லட்சத்து 18 ஆயிரத்து 618 நபர்கள்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் – உலகளவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 38 ஆயிரத்து 930 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 97 ஆயிரத்து 137 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 52 லட்சத்து 51 ஆயிரத்து 446 பேரும், பிரேசில் நாட்டில் 30 லட்சத்து 57 ஆயிரத்து 470 பேரும் இந்தியாவில் 22 லட்சத்து 67 ஆயிரத்து 153 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் – உலகளவில் கொரோனா நிலவரம்

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 49,800 பேரும், பிரேசிலில் 21,888 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 53,016 பேராக அதிகரித்துள்ளனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் – உலகளவில் கொரோனா நிலவரம்

பிரேசிலில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இறப்பை எதிர்கொண்டாலும் நேற்றைக்கு அது புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 21,888 ஆக கட்டுப்படுத்தியுள்ளது.

அதேபோல நேற்றைய நிலவரப்படி அதிக எண்ணிக்கையில் மரணம் அடைபவர்களும் இந்தியாவில்தான் அதிகம்.