சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை!

 

சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை!

சிறையில் இருக்கும் சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியிருப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன் படி கடந்த 2017ம் ஆண்டு பிப்.15ம் தேதி சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை!

சிறை விதிகளின் படி சசிகலா இந்த ஆண்டே விடுதலையாகி இருக்க வேண்டும் என கூறப்படும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகமல இருந்தது. அண்மையில் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சசிகலா விடுதலை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக சிறைத்துறை, சசிகலா ஜனவரி மாதம் விடுதலையாகவிருக்கிறார் என தெரிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே ரிலீஸ் ஆக, அபராதத்தை செலுத்தும் பணியை தொடக்கிவிட்டார் சசிகலா.

சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை!

இந்த நிலையில் சிறுதாவூர் பங்களா,கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியிருப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி சொத்துக்களை கடந்தாண்டு வருமான வரித்துறை முடக்கியிருந்தது நினைவு கூரத்தக்கது.