“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” : பெண் காவலரின் சடலத்துடன் வாழ்ந்த குழந்தைகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” : பெண் காவலரின் சடலத்துடன் வாழ்ந்த குழந்தைகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!

அம்மா தூங்குவதாக நினைத்து குழந்தைகள் அம்மாவின் சடலத்துடன் 22 நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நந்தவன பட்டியை சேர்ந்தவர் அன்னை இந்திரா . காவலர் கட்டுப்பாட்டு அறையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு பால்ராஜ் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அன்னை இந்திரா அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுத்து வந்துள்ளார். இவருடன் குழந்தைகள், அக்கா வாசுகி, குடும்ப நண்பர் சுதர்சனம் என்பவரும் வசித்து வந்துள்ளனர்.

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” : பெண் காவலரின் சடலத்துடன் வாழ்ந்த குழந்தைகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!

இதையடுத்து உடல்நிலை குறைவு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் விடுமுறை எடுத்துள்ளார். மெடிக்கல் லீவ் முடிந்து கடந்த 25 ஆம் தேதி அன்னை இந்திரா பணிக்கு திரும்பியிருக்க வேண்டும். அவர் பணிக்கு திரும்பாததால் அவருடன் பணியாற்றும் காவலர்கள் இருவர் இந்திராவை தேடி வந்துள்ளார். அப்போது அவர் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததுடன் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது அன்னை இந்திரா சடலமாக இருந்துள்ளார். அவர் உடல் மூடிவைக்கப்பட்டிருந்தது.

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” : பெண் காவலரின் சடலத்துடன் வாழ்ந்த குழந்தைகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!

இதுகுறித்து அன்னை இந்திராவின் அக்கா வாசுகி மற்றும் அவரது குடும்ப நண்பர் சுதர்சன் ஆகியோரிடம் விசாரணை செய்ததில், கடந்த டிசம்பர் 7ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவர் மீண்டும் உயிர்த்தெழ பிரார்த்தனை செய்து வருகிறோம் என்று கூறி அதிர்ச்சியை கிளம்பியுள்ளனர் . இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” : பெண் காவலரின் சடலத்துடன் வாழ்ந்த குழந்தைகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!

இதுகுறித்து குழந்தைகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், எங்கள் தூங்கி கொண்டிருக்கிறார். அவரை எழுப்பாதீர்கள். எழுப்பினால் இயேசு உங்களை தண்டிப்பார் என்று கூறியுள்ளனர் . கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் காவலர் இந்திராவிற்கு பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது . அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இந்திராவை மருத்துவமனைக்கு செல்ல சொல்லாமல், பிரார்த்தனையில் சரி செய்வதாக கூறிய வந்துள்ளார். தொடர் பிரார்த்தனையின் காரணமாக இந்திராவின் குழந்தைகள் மற்றும் இந்திராவின் சகோதரி அக்கா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.