முதல்வரை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து – 20ற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்!

முதல்வரை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து – 20ற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்!

முதல்வர் பழனிசாமியை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து – 20ற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் உதயகுமார் கோயில் கட்டிமுடித்துள்ளார். இந்த கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் 12 ஏக்கரில் கட்டப்பட்ட இக்கோயிலில் 7 அடி உயரம் 400 கிலோ எடையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா கோயில் திறப்பு விழா நிகழ்வில் 120 பேருக்கு கோதானம் , 234 பேருக்கு பொற்கிழிகள் வழங்கப்படுகின்றன. இதனால் முதல்வர் பழனிசாமி மதுரைக்கு சென்றுள்ளார்.

முதல்வரை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து – 20ற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்!

இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தேவன்குறிச்சியில் முதல்வர் பழனிசாமியை வரவேற்க சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து உண்டாகியுள்ளது. சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 20ற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.