“புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்” – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

“புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்” – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தென் தமிழகத்தில் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்” – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்து இலங்கை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்” – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வங்க கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ,கேரளா, கோவா, லட்சத் தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.