‘எல்லா முதல்வர்களின் இல்லத்தையும் நினைவில்லமாக மாற்ற முடியாது’ – சென்னை ஐகோர்ட்

‘எல்லா முதல்வர்களின் இல்லத்தையும் நினைவில்லமாக மாற்ற முடியாது’ – சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்கள் என 17 பேரின் இல்லங்களை நினைவில்லமாக மாற்றி பராமரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, எத்தனை காலத்திற்கு நினைவிடங்களை அமைப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

‘எல்லா முதல்வர்களின் இல்லத்தையும் நினைவில்லமாக மாற்ற முடியாது’ – சென்னை ஐகோர்ட்

தொடர்ந்து, அனைத்து முதல்வர்களின் இல்லத்தையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று கூறிய நீதிபதி, அரசின் இந்த செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது என்றும் விட்டால் அமைச்சர்களின் வீடுகள் கூட நினைவு இல்லமாக மாற்றுவதற்கு போலிருக்கிறது என்று விமர்சித்தார். மேலும் மெரினாவில் அடுத்தடுத்து நினைவிடங்கள் கட்டப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி, ஏதாவது இடம் மிச்சம் இருக்கிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘எல்லா முதல்வர்களின் இல்லத்தையும் நினைவில்லமாக மாற்ற முடியாது’ – சென்னை ஐகோர்ட்

அதோடு, நீதித் துறையில் பல நீதிபதிகள் தங்களது பங்களிப்பை தந்துள்ளார்கள். அதற்காக அவர்கள் அனைவருக்குமே சிலை வைக்க முடியுமா என்று ஞாயமான கேள்வியை முன்வைத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.