மனோஜ் சின்ஹா பதவியேற்ற 2 வாரத்தில் காஷ்மீரிலிருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை திரும்ப பெறும் மத்திய அரசு

 

மனோஜ் சின்ஹா பதவியேற்ற 2 வாரத்தில் காஷ்மீரிலிருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை திரும்ப பெறும் மத்திய அரசு

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியன்று, ஜம்மு அண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகளை அளித்து வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்தது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கியதோடு, அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒருநாள் முன்னதாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஜம்மு அண்டு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள் ஆகியோரை மத்திய அரசு காவலில் வைத்தது.

மனோஜ் சின்ஹா பதவியேற்ற 2 வாரத்தில் காஷ்மீரிலிருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை திரும்ப பெறும் மத்திய அரசு

மேலும், ஜம்மு அண்டு காஷ்மீர் முழுவதுமாக கூடுதலாக 40 ஆயிரம் பாதுகாப்பு வடை வீரர்களை குவித்தது. இதனால் ஜம்மு அண்டு காஷ்மீரில் பெரிய கலவரங்கள் நடைபெறவில்லை. கடந்த அக்டோபர் 31ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அண்மையில் கிரிஷ் சந்திரா மர்மு தனது துணைநிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜம்மு அண்டு காஷ்மீரின் புதிய துணைநிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டார். மனோஜ் சின்ஹாவின் நியமனம் ஜம்மு அண்டு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் நிலையாக உள்ளது என்ற மத்திய அரசின் மதிப்பீட்டையும், அரசியல் நடவடிக்கையின் மறுமலர்ச்சியை ஆராய ஒரு கதவை திறந்துள்ளதையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மனோஜ் சின்ஹா பதவியேற்ற 2 வாரத்தில் காஷ்மீரிலிருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை திரும்ப பெறும் மத்திய அரசு

இந்த சூழ்நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு ஜம்மு அண்டு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், ஜம்மு அண்டு காஷ்மீரிலிருந்து சி.ஏ.பி.எப்.-ன் 100 கம்பெனிகளை உடனடியாக திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் அந்தந்த இடங்களுக்கு மாற்றவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்தபட்சம் 300 கம்பெனி வீரர்கள் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஒரு கம்பெனி என்பது 100 முதல் 110 வீரர்கள் கொண்டது. மத்திய அமைச்சகம் அடுத்த மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம குறித்து ஆய்வு செய்யும், அதன் அடிப்படையில் 300 கம்பெனி வீரர்களை திரும்ப பெறுவது குறித்து அமைச்சகம் முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.