“கொரோனா நேரத்தில் உங்கள் சேவை முக்கியம்; முன்னுதாரணமாக இருங்கள்!’- ஆசிரியர்களுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

 

“கொரோனா நேரத்தில் உங்கள் சேவை முக்கியம்; முன்னுதாரணமாக இருங்கள்!’- ஆசிரியர்களுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என்று கூறி சென்னை மாநகராட்சி உத்தரவை எதிர்த்த ஆசிரியர் சங்கத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

“கொரோனா நேரத்தில் உங்கள் சேவை முக்கியம்; முன்னுதாரணமாக இருங்கள்!’- ஆசிரியர்களுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்கவும், தொற்று பாதித்தவர்களை வீட்டு தனிமைப்படுத்துவது போன்ற பணிகளை அந்தந்த மாநகராட்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டு தனிமைப்படுத்தல் திட்டங்களை அமல்படுத்தவும், ஒருங்கிணைப்பு வழங்கவும் 200 ஆசிரியைகளை ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே இப்பணியில் அனுபவமில்லாத ஆசிரியை ஒருவர் ஈடுபட்டு கொரோனா தொற்றுக்கு ஆளாகி அவரது குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

“கொரோனா நேரத்தில் உங்கள் சேவை முக்கியம்; முன்னுதாரணமாக இருங்கள்!’- ஆசிரியர்களுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமை பொறுப்பு கொண்டவர்கள். இதுபோன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இது போன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி ஆசிரியர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.