13 மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!

 

13 மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு  வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வரும் 2 நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த மழையானது வருகின்ற 31ம் தேதிவரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு  வெப்பம் அதிகரிக்கும்!

அதேபோல் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு  வெப்பம் அதிகரிக்கும்!

இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருச்சி ,மதுரை ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.