தமிழகத்தில் இன்று12 இடங்களில் சதமடித்த வெயில்!

 

தமிழகத்தில் இன்று12 இடங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. தற்போதே தமிழகத்தில் கத்திரி வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இது போதாதென்று, வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தையும் இழுத்து சென்று விட்டது. இதனால் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

ttn

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை முடிவடைய இருக்கும் நிலையில் இன்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருத்தணி 105.8, வேலூர் 105.44, கரூர் பரமத்தி 104.9, மதுரை விமான நிலையம் 104.3, திருச்சி சேலம் 102.3, பாளையங்கோட்டை 102.2, மதுரை 101.4, தர்மபுரி 100.7, காரைக்கால் 100.5, பரங்கிப்பேட்டை, நாமக்கல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.