இன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்! உங்க ஏரியா இருக்கா?
May 23, 2020, 18:59 IST1590240540000
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.
தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருத்தணி 109.4, வேலூர் 107.6, திருச்சி 106.7, மதுரை விமான நிலையம் 106.16, கரூர் பரமத்தி 105.08, சேலம் 102.9, நாமக்கல் 102.2, மீனம்பாக்கம் 101.8, பாளையங்கோட்டை 101.3, தருமபுரி 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.