தமிழகத்தில் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது

 

தமிழகத்தில் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

ttn

தமிழகத்தில் இன்று 13 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் – 108.4, மீனம்பாக்கம் – 106.1, கரூர் பரமத்தி – 104.3, சேலம் – 103.6, நுங்கம்பாக்கம் – 103.2, மதுரை விமான நிலையம் – 102.9, கடலூர் – 102.5, புதுச்சேரி -102.2, தருமபுரி – 101.4, பரங்கிப்பேட்டை – 101.3. இந்த ஆண்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.