ஹரியானாவில் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு.. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த அனுமதி

ஹரியானாவில் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு.. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த அனுமதி

ஹரியானாவில் செப்டம்பர் 6ம் தேதி வரை லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட தளர்வுகள் தொடரும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் பல மாநில அரசுகள் லாக்டவுனை தொடர்ந்து நீடித்து வருகின்றன. ஹரியானாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டாலும், 3வது அலை குறித்த எச்சரிக்கை உணர்வுடன் அம்மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் ஹரியானா அரசு தளர்வுகளுடன் லாக்டவுனை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.

ஹரியானாவில் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு.. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த அனுமதி
கொரோனா வைரஸ்

ஹரியானா அரசு இந்த ஆண்டில் கடந்த மே 3ம் தேதி முதல்முறையாக கொரோனா வைரஸ் லாக்டவுனை அமல்படுத்தியது. வாரந்திர அடிப்படையில் லாக்டவுனை நீட்டித்த வந்த ஹரியானா அரசு, கடந்த 9ம் தேதி முதல் 15 தினங்களுக்கு ஒரு முறை லாக்டவுனை நீட்டித்து வருகிறது. அதன்படி தற்போது கொரோனா வைரஸ் லாக்டவுனை இன்று காலை 5 மணி முதல் செப்டம்பர் 6ம் தேதி காலை 5 மணி வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது.

ஹரியானாவில் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு.. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த அனுமதி
ஜிம்

ரெஸ்ட்ராண்ட், பார்கள், ஹோட்டல்கள், மால்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவீத திறனில் தொடர்ந்து செயல்படலாம். அனைத்து கடைகளும் திறக்கலாம். அனைத்து பல்கலைக்கழகங்கள், அரசு துறைகள் வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்த அனுமதி. பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் பிராட்டிக்கல் வகுப்பு, தேர்வுகள் நடத்தலாம் போன்ற முந்தைய தளர்வுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.