மே 24ம் தேதி லாக்டவுனை நீடித்த ஹரியானா பா.ஜ.க. அரசு .. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

மே 24ம் தேதி லாக்டவுனை நீடித்த ஹரியானா பா.ஜ.க. அரசு .. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

ஹரியானாவில் லாக்டவுனை வரும் 24ம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. ஹரியானா மாநிலமும் கொரோனாவின் பார்வையில் இருந்த தப்பவில்லை. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு, முதலில் கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை லாக்டவுனை அமல்படுத்தியது.

மே 24ம் தேதி லாக்டவுனை நீடித்த ஹரியானா பா.ஜ.க. அரசு .. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
பா.ஜ.க.

இருப்பினும் கொரோனா நிலவரம் கவலையளிக்கும் வகையில் இருந்ததால், ஹரியானாவின் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி, லாக்டவுனை மே 17ம் தேதி வரை நீட்டித்தார். இந்நிலையில் லாக்டவுனை மேலும் 7 நாட்களுக்கு அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

மே 24ம் தேதி லாக்டவுனை நீடித்த ஹரியானா பா.ஜ.க. அரசு .. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
அனில் விஜி

லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக ஹரியானாவின் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி டிவிட்டரில், பெருவாரியாக பரவும் தொற்றுநோய், பாதுகாப்பு ஹரியானா மே 17 முதல் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை செயல்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதிவு செய்துள்ளார்