அதானி துறைமுகம் விவகாரம்… மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது.. ராகுல்

அதானி துறைமுகம் விவகாரம்… மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது.. ராகுல்

அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க பணிகளை குறிப்பிட்டு, மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூா் அருகே காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்துக்கு சொந்தமான துறைமுகம் செயல்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்திடமிருந்து அந்த துறைமுகத்தின் 97 சதவீத பங்குகளை வாங்கியது. தற்போது அந்த துறைமுகத்தை ரூ.53 ஆயிரம் கோடியில் விரிவுப்படுத்தப்பட்ட திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க திட்டத்துக்கு தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதானி துறைமுகம் விவகாரம்… மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது.. ராகுல்
ராகுல் காந்தி

தற்போது அதானி நிறுவனத்தின் துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், காட்டுப்பள்ளி பேரியர் தீவில் உள்ள துறைமுகம் சட்டவிரோதமானது. ஆனால் அதன் கட்டுமானத்தை மோடி அரசு உறுதி செய்கிறது. நம் நாட்டை அவரது (மோடி) முதலாளித்துவ நண்பர்களுக்கு ஒப்படைப்பது தொடர்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.

அதானி துறைமுகம் விவகாரம்… மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது.. ராகுல்
காட்டுப்பள்ளி துறைமுகம்

அதானி குழும துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால், மீனவ கிராமங்கள் கடலுக்குள் போகும், பழவேற்காடு ஏரி பகுதிகள் அழியும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.