எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி நெகட்டிவ்!

 

எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி நெகட்டிவ்!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கிய தொழில்துறை இன்னமும் மீளவில்லை என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் தொழில்துறை வளர்ச்சி குறியீடுகள் நெகட்டிவாக உள்ளன.

எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி நெகட்டிவ்!

முக்கிய எட்டு தொழில் துறைகளின் வளர்ச்சி தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியாவில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி கடந்த மார்ச் மாதம் முதல் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஏப்ரல் மே மாதங்களில் மைனஸ் 37 சதவீதம் வரை வீழ்ச்சி கண்ட தொழில்துறை, ஊரடங்கு தளர்வுக்கு பின், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மைனஸ் 7 சதவீதம் வரை வீழ்ச்சியில் இருந்தது.

எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி நெகட்டிவ்!

இந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை நெகட்டிவ் வீழ்ச்சியில் இருந்தது. தற்போது, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் படி முக்கிய துறைகளின் வளர்ச்சி நவம்பர் மாதத்தில் மைனஸ் 2.6 சதவீதமாக உள்ளது.

எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி நெகட்டிவ்!

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளில் முக்கிய 8 துறைகளின் பங்கு மட்டும் 40.6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எட்டு முக்கிய துறைகளும் கடும் வீழ்ச்சியில் உள்ளதால், பொருளாதார தேக்க நிலை நீடித்து வருவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொழில்துறையை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பு உள்ளது.