196 நாட்கள் விண்வெளியில் வசித்த குழு – பூமி திரும்பியது

196 நாட்கள் விண்வெளியில் வசித்த குழு – பூமி திரும்பியது

நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி (chris cassidy)யின் குழு கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி விண்வெளிக்குப் பயணமானார்கள். அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 15 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டே பயணம் மேற்கொண்டனர்.

196 நாட்கள் விண்வெளியில் வசித்த குழு – பூமி திரும்பியது

இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது அங்கிருந்து பூமியை எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார் கிறிஸ் கேசிடி. அந்தப் படங்கள் மிக முக்கியமானதாக நாசா பகிர்ந்ததும் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.

196 நாட்கள் விண்வெளியில் வசித்த குழு – பூமி திரும்பியது

196 நாட்கள் கிட்டத்த ஆறரை மாதங்கள் விண்வெளியில் வசித்து, பணியாற்றிய கிறிஸ் கேசிடி தலைமையான குழு தற்போது பூமிக்குத் திரும்பியுள்ளது.

இக்குழு பூமிக்குத் திரும்பும் ஏற்பாட்டின்போது பெரும் சிக்கல் ஏற்பட, அதைச் சரிசெய்து பூமிக்கு வந்ததால் பெரும் மகிழ்ச்சியோடு இக்குழுவை வரவேற்றுள்ளனர் விஞ்ஞானிகள்.