12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

 

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக உள்ளது. ராமர் கோயில் பூமி பூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றுதான் பூமி பூஜையின் முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

ராமர் கோயில் பூமி பூஜை விழா இன்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது.
அயோத்தி வரும் பிரதமர் மோடி முதலில் ஹனுமான்கார்ஹி கோயிலுக்கு வழிபடுகிறார். பின் அங்கியிருந்து பூமி பூஜை விழாவுக்காக ராம் ஜென்மபூமி வளாகத்துக்கு செல்கிறார்.
விழாவுக்காக அமைக்கப்பட்ட மேடையில், பிரதமர் மோடி, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி.கவர்னர் ஆனந்திபென் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் மட்டுமே அமருவர்.
மதியம் 12.30 மணிக்கு பூமி பூஜை தொடங்குகிறது. 12.40 பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்
ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்காக நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புனித தலங்களிலிருந்து மண், மற்றும் 100க்கும் மேற்பட்ட புனித நதிகளிலிந்து நீரும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பத்ரிநாத் மண் மற்றும் உத்தரகாண்டின் முக்கிய கோயில்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மண் உள்பட இதர புனித பொருட்கள் ராமர் கோயில் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும்.
அலக்நந்தா நதி (புனித கங்கையின் துணை நதி), சங்கம் (கங்கை, யமுனா,மற்றும் சரஸ்வதி நிதிககளின் சங்கமம் பகுதி) மற்றும் மேகலாயாவின் ஜெயிந்தியா ஹில்ஸ் ஆகியவையும் மற்ற புனித கூறுகளில் இடம்பெறும்.
ராமர் கோயில் நாகரா அல்லது வட இந்திய கோயில் பாணியில் 5 மண்டபங்களுடன் கட்டப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவில் பக்தர்களுக்கு இடமளிக்க நோக்கில் கோயில் முன்பு வடிவமைக்கப்பட்டதை காட்டிலும் உயரமாகவும், கிட்டத்தட்ட 2 மடங்கு பெரிதாகவும் (கோயில் கட்டுமான பரப்பு) மற்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது