‘எழுவர் விடுதலை’ ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

 

‘எழுவர்  விடுதலை’ ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

‘எழுவர்  விடுதலை’ ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் சேர்த்தது. இருப்பினும் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. பேரறிவாளன் விடுதலை கோரி தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வருகிற 23ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. அதேசமயம் இந்த விவகாரத்தில் ஆளுநரின் தாமதத்திற்கு உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் #29YearsEnoughGovernor பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்; தமிழக முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்த்திராமல் வலியுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.