கூட்டுறவு வங்கிகளுக்கு செக் வைச்ச மத்திய அரசு… ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் வருகிறது கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகளுக்கு செக் வைச்ச மத்திய அரசு… ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் வருகிறது கூட்டுறவு வங்கிகள்

நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள் (1,482) மற்றும் பல மாநில கூட்டுறவு வங்கிகள் (58) இனி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்குள் வரும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெபாசிட்தாரர்களின் நலத்தை கருத்தில் கொண்டும், பஞ்சாப் அண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிகழந்த மோசடி சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில் அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் இது உடனடியாக அமலுக்கு வரும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு செக் வைச்ச மத்திய அரசு… ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் வருகிறது கூட்டுறவு வங்கிகள்

நம் நாட்டின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு எல்லாம் பாஸ். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மற்றும் அனுமதியோடுதான் இங்கு எந்தவொரு நிதி நிறுவனங்களையும் யாராலயும் நடத்த முடியும். ரிசர்வ் வங்கி வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும். வங்கிகள் தவறு செய்தால் அபராதமும் விதிக்கும். இதனால் வங்கிகள் மிகவும் பொறுப்புடன் செயல்படும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு செக் வைச்ச மத்திய அரசு… ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் வருகிறது கூட்டுறவு வங்கிகள்

ஆனாலும், சில நேரங்களில் சில வங்கிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு ரிசர்வ் வங்கியிடம் மாட்டி விடுகின்றன. ரிசர்வ் வங்கியும் இதை தான் எதிர்பார்த்தேன் என்று ஒரு தொகையை அபராதமாக அந்த வங்கிகளிடம் இருந்து கறந்து விடுகிறது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து வங்கிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதால்தான் அதில் பணத்தை போட்ட வாடிக்கையாளர்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.
தற்போது கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் இனி அந்த வங்கிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.