டிஜிட்டல் பள்ளி! தமிழகம் எத்தனையாவது இடம்?

 

டிஜிட்டல் பள்ளி! தமிழகம் எத்தனையாவது இடம்?

மத்திய அரசின் டிஜிட்டல் கல்வியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 7வது இடத்தை பிடித்துள்ளது.

டிஜிட்டல் பள்ளி! தமிழகம் எத்தனையாவது இடம்?

கொரோனா பெருந்தொற்றால் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக டிஜிட்டல் முறையில் ஆன்லைன் கல்வி மற்றும் டிவி, ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக பிரதமரின் இ வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, தூர்தனின் இதர சேனல்கள் மற்றும் அகில இந்திய ரேடியோ நெட்வொர்க் மூலமும் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது.

இணைய இணைப்பு இல்லாதவர்களுக்காகவே டிவி, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் புதிய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது.

டிஜிட்டல் வழிக் கல்வியில் தமது முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அரசு, அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் கல்வியின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில், ஹிமாச்சலப் பிரதேசமும், மேகாலயா மாநிலமும் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 7 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய டிஜிட்டல் கல்வி – ஜூன் 2020 என்ற ஆய்வறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.