ஸ்டாலின் கூறிய யோசனைகளைத்தான் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது! – முதல்வருக்கு பொன்முடி பதில்

 

ஸ்டாலின் கூறிய யோசனைகளைத்தான் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது! – முதல்வருக்கு பொன்முடி பதில்

ஸ்டாலின் கூறிய யோசனைகளைத்தான் தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி விளக்கம் கொடுத்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை என்ன ஆலோசனை கூறியுள்ளார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஸ்டாலின் கூறிய யோசனைகளைத்தான் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது! – முதல்வருக்கு பொன்முடி பதில்இதற்கு தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார். ஸ்டாலின் அடிக்கடி கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்பார். தமிழக அரசின் ஊழல்கள் பற்றி ஸ்டாலின் புள்ளிவிவரத்தோடு கூறி வருகிறார்.
தமிழகத்தில் நோய்ப்பரவலைத் தடுத்து நிறுத்திவிட்டதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அவருக்கு அரசியலும், நிர்வாகமும் தெரியவில்லை என்று தெரிகிறது. நேற்று 3000-க்கும் மேற்ட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கூறிய யோசனைகளைத்தான் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது! – முதல்வருக்கு பொன்முடி பதில்மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், இந்த நோய்ப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்தில் இந்த நோய் வராது என்றார். இப்போத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். சென்னையில் ஊரடங்கு இருக்காது என்று கூறினார். இரண்டே நாளில் ஊரடங்கு என்று அறிவித்தார்.
ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று முதலமைச்சர் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பிளஸ் 12 (கடைசி தேர்வு), 10ம் வகுப்புத் தேர்வை நிறுத்த வேண்டும். நடமாடும் மருத்துவமனை வேண்டும் என்று பல யோசனைகளை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் சொன்ன யோசனையைத்தான் இந்த அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அனைத்து மாநிலத்திலும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர்கள் விவாதிக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதில் என்ன தவறு? எதிர்க்கட்சிகள் செய்வதைப் பாராட்ட வேண்டும். அதைத் தடுக்கக் கூடாது. தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தன்னுடைய உயிரையே தியாகம் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைவருக்கும் நிவாரணம் அளித்தது தி.மு.க-தான். அதனால்தான் பயந்து ஏதேதோ முதல்வர் பேசியுள்ளார்” என்றார்.