உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரப்பர் உள்ளிட்ட 20 பொருட்கள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு

 

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரப்பர் உள்ளிட்ட 20 பொருட்கள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு

உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் ரப்பர் உள்பட 20க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான சுங்க வரி மத்திய பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்கும் வழி சுயசார்பு இந்தியா. உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும். குறைந்த தொழில்நுட்ப பொருட்களை பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக, குறைந்த விலையில் கிடைக்கும் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்களிடம் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உள்நாட்டில் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டுமானால் முதலில் மூலப்பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும். நம் நாட்டில் எல்லா தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை, சிலவற்றை வெளிநாடுகளில் இருந்ததுதான் இறக்குமதி செய்ய வேண்டியது உள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரப்பர் உள்ளிட்ட 20 பொருட்கள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு
நிர்மலா சீதாராமன்

அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி அதிகமாக இருப்பதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. ஆகையால் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் மீதான சுங்க வரியை குறைத்தால் குறைந்த விலையில் பொருட்களை தயாரிக்க முடியும். மேலும் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், ரப்பர் பொருட்கள், தோல் ஆடைகள், தொலைத்தொடர்பு கருவிகள் உள்பட 20க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரப்பர் உள்ளிட்ட 20 பொருட்கள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு
வைரங்கள்

பர்னிச்சர் தயாரிப்புகள் மற்றும் காப்பர் செறிவுக்கு பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில மூலப்பொருட்கள் மீதான சுங்க வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விலையுயர்ந்த மூலப்பொருட்கள் சர்வதேச சந்தையில் இந்தியாவின் விலை போட்டித்தன்மையை பாதிக்கின்றன. நாட்டின் பர்னிச்சர் ஏற்றுமதி மிகக்குறைவு. அதேசமயம் இந்த துறையில் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.